தவெகவில் இணையும் 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள் - மூத்த பத்திரிக்கையாளர் முத்தலிப்(வீடியோ)
தவெகவில் 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைய உள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் முத்தலிப் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள்
கரூர் துயர சந்திப்பிற்கு முன்னர், முதல்முறையாக கடந்த 23 ஆம் திகதி விஜய் காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பு நடத்தினார்.

இதில் பேசிய விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம் என கூறி விட்டு, சிலவற்றை குறிப்பிட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை எனவும், திமுக மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை விஜய் முன்வைக்கவில்லை எனவும், 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளார்.
மேலும், காளியம்மாள், மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா உள்ளிட்டோர் தவெகவில் இணைய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |