நாவூறும் சுவையில் முட்டை மிட்டாய்.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த முட்டை மிட்டாயை விரும்பி உண்ணுபவர்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் முட்டை மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால் கோவா- 1 கப்
- பாதாம்- 15
- நெய்- ¼ கப்
- முட்டை- 6
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- சர்க்கரை- 1 கப்
செய்முறை
முதலில் ஊறவைத்த பாதாமை ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பாக் கோவா, அரைத்த பாதாம், நெய் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதனைதொடர்ந்து கலந்த கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் முட்டை கலவையை 35 நிமிடம் வைத்து வேகவைத்தால் போதும் சுவையான முட்டை மிட்டாய் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |