துர்கா பூஜையையொட்டி சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை தொடங்கிய நிலையில் சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்படவுள்ளது.
கைதிகளுக்கு பிரியாணி
இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்கி களைகட்ட ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறை கைதிகளுக்கு துர்கா பூஜையையொட்டி மட்டன் பிரியாணியும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரியின் 9 நாட்களுக்கும் சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட இருக்கிறது. கைதிகளுக்கு வழங்கப்படும் உணவானது சமையல்காரர்களாக பணிபுரியும் கைதிகளே சமைக்கவுள்ளனர்.
இதில், கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அசைவ உணவை யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பண்டிகை சமயங்களில் கைதிகளுக்கு அந்த உணர்வை கொண்டு வருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |