நாவூறும் சுவையில் நெய் மட்டன் வறுவல்.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த சுவையான நெய் மட்டன் வறுவலை விரும்பி உண்ணுவார்கள்.
இந்த சுவையான நெய் மட்டன் வறுவல் சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் நெய் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- 2 ஸ்பூன்
- மட்டன்- 1kg
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி- 1 ஸ்பூன்
- சோம்பு- ½ ஸ்பூன்
- மிளகு- ½ ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பட்டை- 1
- கிராம்பு- 2
- நட்சத்திர பூ- 1
- காய்ந்த மிளகாய்- 7
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் நெய் சேர்த்து அதில் மட்டன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 7 விசில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் கொத்தமல்லி, சோம்பு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, நட்சத்திர பூ, காய்ந்தமிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதனை நன்கு ஆறவைத்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலில் நெய் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி போன் அரைத்த கலவை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இறுதியாக வேகவைத்த மட்டன் சேர்த்து கிளறி நன்கு கெட்டியாகி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான நெய் மட்டன் வறுவல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |