நாவூறும் சுவையில் மட்டன் கோலா உருண்டை: எப்படி செய்வது?
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.
மட்டன் தொடங்கி மட்டன் ஈரல்,மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம்.
அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- மட்டன்- ½ kg
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- சீரக தூள்- ½ ஸ்பூன்
- சோம்பு தூள்- ½ ஸ்பூன்
- கறி மசாலா- ½ ஸ்பூன்
- பட்டை, ஏலக்காய், கிராம்பு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- முட்டை- 1
- பொட்டுக்கடலை மாவு- ½ ஸ்பூன்
- தேங்காய்- ½ மூடி
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 100ml
- கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
- புதினா- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 3 ஸ்பூன்
- மட்டன் மசாலா- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- வெங்காயம்- 3
செய்முறை
முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை தண்ணீரில் வேகவைத்து பின் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சைமிளகாய், புதினா, (பட்டை, ஏலக்காய், கிராம்பு) பேஸ்ட், கொத்தமல்லி இலை, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி தானியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலில் நெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின் ஏற்கனவே தேங்காய் சேர்த்து வதக்கிய மசாலா சேர்த்து வதக்கி தானியாக எடுத்து வைக்கவும்.
பின் அதே வாணலில் நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மட்டன் மசாலா, சீரக தூள், சோம்பு தூள், கறி மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
அடுத்து இதனுடன் வதக்கி வைத்த வெங்காயம், தேங்காய் கலவையை சேர்த்து கலந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேகவைத்து அரைத்த மட்டன், அரைத்த மசாலா, முட்டை, உப்பு சேர்ந்து கலந்து அதில் பொட்டுக்கடலை மாவு சேர்த்து உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டை பிடித்த மசாலாவை பொறித்து எடுத்தால் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |