MV Hondius கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 பேர்: ஸ்பெயின் நாட்டவருக்கு தொற்று உறுதி
எம்.வி.ஹோன்டியஸ் சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு பயணி ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹன்டா வைரஸ் தொற்று
அர்ஜெண்டினாவில் இருந்து Cape Verde என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த MV Hondius என்னும் சொகுசுக் கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ்(Hintavirus) தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஹன்டா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 3 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, இந்த விவகாரம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு பயணி ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட பரிசோதனையின் போது வைரஸ் தொற்றானது உறுதி செய்யப்பட்டதாக திங்கட்கிழமை ஸ்பெயின் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை MV Hondius கப்பலில் இருந்து மாட்ரிட்டில் உள்ள கோமேஸ் உல்லா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 14 பயணிகளில் தற்போது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமான கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தற்போதைய நிலை
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு தற்போது நோய்க்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. அவர் சீரான உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட மீதமுள்ள 13 பேருக்கும் முதல் கட்ட சோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |