எரிபொருள் தட்டுப்பாடு: பாதியில் நின்ற சொகுசு கப்பல்: உலகம் சுற்றும் பயணத்தில் ஏற்பட்ட தடை
MV Odyssey halts his 3 years global expedition: 3 ஆண்டுகள் உலகை சுற்றி வரும் நோக்கில் புறப்பட்ட சொகுசு கப்பல் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதியில் நிறுத்தப்பட்ட உலகம் சுற்றும் பயணம்
3 ஆண்டுகள் உலகை சுற்றி வரும் நோக்கில் எம்.வி. ஒடிசி (MV Odyssey) என்ற சொகுசு கப்பல் புறப்பட்ட நிலையில் கம்போடியாவின் சிஹானுக்வில்(Sihanoukville) கப்பலானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் உயர்ந்து வரும் எரிபொருள் விலை நிறுவனத்திற்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதே கப்பல் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணம் என்று அமெரிக்காவின் புளோரிடாவை தலைமையிடமாக கொண்ட வில்லா வீ ரெசிடென்ஸஸ்(Villa Vie Residences - VVR) என்ற கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிதக்கும் வீடுகள் என விளம்பரப்படுத்தப்பட்ட “எம்.வி. ஒடிசி” சொகுசு கப்பலானது 7 கண்டங்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றிப் பார்க்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை “எம்.வி. ஒடிசி” சொகுசு கப்பலானது கம்போடிய துறைமுகத்தில் பாதியில் நிறுத்தப்பட்டு அதில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் பாதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
பயணிகள் தவிப்பு
கப்பலில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகளுக்கு தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்ய உதவி வருவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அடுத்த 60 நாட்களில் நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் மூலதன சீரமைப்பு திட்டங்களை மதிப்பிட்டு வருவதாகவும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த கப்பலில் பயணித்த பிரபல வலைப்பதிவர் ராண்டி காசிங்ஹாம் தெரிவித்த தகவலில், கப்பலில் இருந்து இறக்கிவிடப்பட்ட நாங்கள் வெறும் பேருந்துகளில் ஏற்பட்டு நகரத்தின் நடுவே இறக்கிவிடப்பட்டோம்.
நாங்கள் தங்குவதற்கு எந்த ஹோட்டல் பட்டியலையும், அதற்கான கட்டணத்தையோ அல்லது போக்குவரத்து செலவுகளையோ கூட கப்பல் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என சாடியுள்ளார்.