ராணுவத்தில் இருந்த எனது தந்தையை தீவிரவாதிகள் கொலை செய்தனர்.., பிரபல நடிகை உருக்கம்
ராணுவ அதிகாரியாக இருந்த எனது தந்தையை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர் என்று பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் நினைவு கூர்ந்தார்.
பிரபல நடிகை உருக்கம்
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலில் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை நிம்ரத் கவுர் முன்பு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் அந்த பேட்டியில் பேசுகையில், "இன்ஜீனியராக இருந்த என்னுடைய தந்தை ஜம்முவில் இருக்கும் வேரிநாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். அப்போது அவர் இளம் ராணுவ வீரர் ஆவார்.
அந்த நேரத்தில் குடும்பத்துடன் அங்கு வாழ முடியாது என்பதால் எங்களை பாட்டியாலாவில் விட்டுவிட்டு அவர் காஷ்மீருக்கு சென்றார்.
பின்னர் நாங்கள் எங்களது தந்தையை பார்க்க 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீருக்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேலை பார்த்த இடத்தில் இருந்து அவரை முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டனர்.
அப்போது சில தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கடத்தியவர்கள் அப்பாவிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. அவர் இறக்கும் போது அவருடைய வயது 44.
பின்னர் தந்தையின் உடல் டெல்லிக்கு வந்த பிறகு தான் அவரது முகத்தை பார்த்தோம். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக எனது தந்தை உயிர் தியாகம் செய்தார்.
பின்னர், ஜம்மு-காஷ்மீருக்கு போகவே கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், திரைப்பட விழா ஒன்றுக்காக அங்கு சென்றேன்" என்று நினைவு கூர்ந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |