ஆபாச வீடியோவை அனுப்புகிறார்! சமீபத்தில் அதிர்ச்சியை கிளப்பிய தமிழக பெண் வேட்பாளர் தேர்தல் நாளில் மீண்டும் ஏற்படுத்திய பரபரப்பு
தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் மை இண்டியா கட்சி வேட்பாளர் வீரலட்சுமி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமி செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் வீரலட்சுமி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி இன்று திடீரென போராட்டம் செய்தார்.
தமது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வீரலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் வீரலட்சுமி, தான் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவும் தொடர்ந்து என்னுடைய வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை ஒரு நபர் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.
அவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
