எனக்கு வெற்றி உறுதி! சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? உடைத்து பேசிய சீமான
திருவொற்றியூர் பகுதியில் மக்களுக்கு அதிக பிரச்சினை இருப்பதால் தான் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று திருவொற்றியூர் குடியிருப்பு பகுதிகளில் மினி வேனில் சீமான் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திருவொற்றியூர் பகுதியில் மக்களுக்கு அதிக பிரச்சினை இருப்பதால்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இல்லை என்றால் எனது சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிட்டு இருப்பேன்.
மக்கள் பிரச்சினையை தீர்க்க என்னால் மட்டுமே முடியும் என்பதால்தான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தேன்.
நான் மக்கள் குறைகளை கேட்க வரவில்லை. தீர்ப்பதற்காக வந்திருக்கிறேன், எனக்கு மக்கள் வரவேற்பு அதிகம் உள்ளதால் வெற்றி உறுதி என கூறியுள்ளார்.