பள்ளிக்கூடம் மீது குண்டு வீசிய மியான்மர் ராணுவ விமானம் - 20 மாணவர்கள் உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
20 மாணவர்கள் உயிரிழப்பு
மியான்மர் ராணுவம், வான்வழித் தாக்குதல்கள் மூலம் அதிகளவில் இந்த போராட்டங்களை ஒடுக்கி வரும் நிலையில், இதில் 6,600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில், ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்படும் பள்ளியின் மீது, காலை 9 மணியளவில் ராணுவ விமானம் குண்டு வீசியுள்ளது.
இதில், 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளியின் அருகில் இருந்த 3 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலை எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) கண்டித்துள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்புவதாக ராணுவம் இந்த தாக்குதலை மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |