மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூ கி வீட்டுச் சிறைக்கு மாற்றம்
மியான்மர் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கி, வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆங் சாங் சூ கி வீட்டுச் சிறைக்கு மாற்றம்
2021ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மர் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூ கி (80).
அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில், அவரது உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துவந்தார்கள்.

இந்நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆங் சாங் சூ கி வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட விடயத்தை வரவேற்றுள்ள ஐ. நா அமைப்பு, இது ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் பல ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூ கி, மியான்மரின் சுதந்திரப்போராட்ட நாயகனான ஜெனரல் ஆங் சான் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |