மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்: மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர்: 34 பேர் பலி
மியான்மரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 34 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர்
மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கும், கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே உள்நாட்டு போர் மோதலானது தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் படையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் செயல்பட்டு வந்த பொது மருத்துவமனை மீது போர் விமானங்கள் மூலம் மியான்மர் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வான்வழித் தாக்குதலில் குறைந்தது 34 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், 80 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மீது இராணுவத்தினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஐ.நா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |