மியான்மர் இராணுவத்துக்கு செக் வைத்த ஐ.நா.!
இராணுவ ஆட்சி மாற்றத்துக்கு பதிலளிக்கும் வகையில் மியான்மருக்கு ஆயுத விற்பனையை நிறுத்துமாறு மற்ற நாடுகளுக்கு ஒரு அரிய அழைப்பை ஐ.நா வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் மியான்மரில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்த இராணுவ ஆட்சிக்குழுவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.
மியான்மரின் இராணுவ சர்வாதிகாரத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அரசு தலைவர் ஆங் சான் சூகி மற்றும் பல அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐ.நா அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு 119 நாடுகள் ஆதரவளித்தன, பெலாரஸ் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தது.
முக்கியமாக ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட மியான்மர் இராணுவத்தின் இரண்டு மிகப்பெரிய ஆயுத சப்ளையர்கள் உட்பட மேலும் 36 நாடுகள் இதற்கு வாக்களித்தன.
அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (Assistance Association for Political Prisoners-AAPP) படி, மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இதுவரை 860-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று குவித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 5,000 பேரை கைது செய்து வைத்துள்ளது.