மியான்மரில் புதிய திருப்பம்: 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் ரத்து! தேர்தல் ஆணையம்
மியான்மரில் 2020 நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாக எதிர்க்கட்சி சேனல் மிஸிமா டிவி ஜூலை 27 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் சட்ட விதிமுறைகள் பெரிய அளவில் மீறப்பட்டதின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முடிவுகளை ரத்து செய்வது, 2020 தேர்தலில் மகத்தான வெற்றிப் பெற்ற the National League for Democracy (NLD)-ஐ கலைக்க வழிவகுக்கும் என மிஸிமா டிவி குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 2020-ல் NLD தேர்தலில் மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மியான்மர் இராணுவம், NLD கட்சி சுமார் 1.3 மில்லியன் வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.
எனினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் NLD கட்சி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இதை காரணமாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்த மியான்மர் இராணுவம், ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது.
இதனை எதிர்த்து மியான்மரில் போராட்டங்கள் வெடித்தது, இதில் ஏராளாமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.