மியான்மரில் பயங்கரமான வெடிப்பு விபத்து: 6 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்து சம்பவத்தில் குறைந்தது 45 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர வெடிப்பு விபத்து
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் ஷான் மாநிலத்தில் நாம்காம் நகரில் உள்ள கவுங்டப் என்ற கிராமத்தில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடிப்பு விபத்து பதிவாகியுள்ளது.
சீன எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் திடீரென வெடித்து சிதறின.
❗️⚠️🇲🇲 - At least 55 people, including children, were killed and about 70 others injured in a massive explosion Sunday at a gelignite explosives warehouse in Kaungtup village, northeastern Myanmar.
— 🔥🗞The Informant (@theinformant_x) May 31, 2026
The warehouse was controlled by the Ta’ang National Liberation Army (TNLA) and… pic.twitter.com/eYccA0lOue
சுரங்கப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறியதில் அருகிலிருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
45 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த வெடிப்பு சம்பவத்தில் 6 குழந்தைகள் உட்பட 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 74 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் 100 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
வெடிப்பு விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த இந்த பகுதி தற்போது மியான்மர் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் தாங் தேசிய விடுதலை ராணுவம் என்ற பழங்குடியின ஆயுத குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |