தப்பிக்க முடியவில்லை! இந்திய கிரிக்கெட் அணி வீரர் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்.. காயமடைந்த பரிதாபம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் அசோக் திண்டா மர்ம நபர்களால் கற்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா, சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், மோய்னாப் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அசோக் திண்டாவின் வாகனத்தை மர்ம நபர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து அசோக்கின் மேலாளர் கூறுகையில், மர்ம நபர்கள் சிலர் அசோக் திண்டாவின் வாகனத்தை திடீரென கற்களால் தாக்கியதாகவும், இதில் அசோக் திண்டாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சாலையின் அனைத்து வழிகளிலும் அவர்கள் திரண்டதால் தங்களால் தப்பிக்க முடியவில்லை என அசோக் திண்டாவின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான முழு அறிக்கையையும் உடனடியாக சமர்பிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
