இளம்பெண்ணிடம் வம்பு செய்த மர்ம நபர்... சமயோகிதமாக காப்பாற்றிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்
நியூயார்க்கில் இளம்பெண் ஒருவரிடம் இரவு நேரத்தில் வம்பு செய்துகொண்டிருந்தார் மர்ம நபர் ஒருவர்.
அதை தற்செயலாக கவனித்த Pika என்ற இளம்பெண், அவரைக் காப்பாற்ற முடிவு செய்துள்ளார். இரவு நேரம், உதவிக்கு யாருமில்லை, பயம்தான்... என்றாலும் அந்த பெண்னை அப்படியே விட்டுவிட்டால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்த Pika, சமயோகிதமாக ஒரு விடயம் செய்தார்.
தனது காரை அவர்களுக்கு அருகே கொண்டு நிறுத்திய Pika, அந்த பெண்ணிடம், நான் உனக்காக காரில் காத்திருக்கிறேன், நீ இங்கே யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்? யார் இது என கேட்க, அந்த ஆண், சும்மா பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இவரை உனக்குத் தெரியுமா என மெதுவாக Pika அந்த பெண்ணிடம் கேட்க, இல்லை என்று அவரும் கூற, போகலாம் என அவரை அங்கிருந்து அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார் Pika.
@pikanab I WAS SO SCARED. THIS IS WHY GIRL NEED TO STICK TOGETHER. Has anything ever happened like this before to u?##fyp ##fypage ##pov ##schoolpov ##honab
♬ original sound - ?Nab?
பின்னர், அந்த பெண்ணிடம் உங்களை காரில் கொண்டு விடவேண்டுமா என்று அவர் கேட்க, அவரும் ஆம் என்று கூற, இருவருமாக விட்டால் போதும் என காரில் ஏறி அங்கிருந்து இடத்தைக் காலி செய்திருக்கிறார்கள்.
இந்த வீடியோவை Pika சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, ஆயிரக்கணக்கானோர் அவரை தைரியமான பெண் என பாராட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் அந்த பெண்ணை அப்போது காப்பாற்றியிருக்காவிட்டால், அவர் ஒருவேளை கடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் ஒருவர்.

