மாயமான பிரித்தானியச் சிறுமி என கூறிக்கொள்ளும் இளம்பெண்ணுக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள்...
போர்ச்சுக்கல் நாட்டில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானியச் சிறுமி தான்தான் என கூறிக்கொள்ளும் இளம்பெண்ணுக்கு வரத்துவங்கியுள்ள மர்ம தொலைபேசி அழைப்புகளால், திகிலடைந்துள்ளார் அவர்.
சுற்றுலா சென்றபோது பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர்
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
இந்நிலையில், போலந்து நாட்டவரான ஜூலியா (Julia Wendell, 21) என்ற இளம்பெண், தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தன் காலிலுள்ள ஒரு அடையாளமும், தன் கண்ணிலிருக்கும் ஒரு புள்ளியும், தான் மேட்லினாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் என்று கூறியிருந்தார் அவர்.
© OK Magazine
மர்ம தொலைபேசி அழைப்புகள்
தான் பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்று ஜூலியா கூறியதைத் தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வரத்துவங்கின.
ஆகவே, அவர் அமெரிக்காவில் பாதுகாப்பான ஒரு இடத்தில் Dr Fia Johansson என்னும் தனியார் துப்பறிவாளருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜூலியாவுக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வரத்துவங்கியுள்ளன.
குறிப்பாக, மேட்லின் மாயமான போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து மர்மப் பெண் ஒருவர் ஜூலியாவைத் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அவரை போர்ச்சுக்கல்லுக்கு வருமாறு வற்புறுத்தி வருகிறார்.
உனக்கு அன்பு தேவை, போர்ச்சுக்கல்லில் எல்லாரும் உன்னை நேசிக்கிறார்கள். நீதான் மேட்லின் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனக்கு ஒரு மகள் வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதுண்டு, ஆகவே, நீ போர்ச்சுக்கல் வந்தால் உன்னை அன்புடன் மகளாகவே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாராம் அந்தப் பெண்.
இதுபற்றி தெரிவித்த Dr Fia, அந்த மர்மப் பெண் ஜூலியாவிடம், நான் உன்னை அழைத்ததைக் குறித்து Dr Fiaவிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாதே, அவர் மோசமானவர், உன்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறது, நான் டிக்கெட் எடுத்துத் தருகிறேன், நீ என்னிடம் வந்துவிடு என கூறுவதாக தெரிவித்துள்ளார்.
© OK Magazine
மேட்லினைக் கடத்திய கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம்
அந்தப் பெண், ஏதாவது குழந்தைகளைக் கடத்தி தவறான செயல்களில் ஈடுபடுத்தும் பெண்ணாகவோ அல்லது மேட்லினைக் கடத்திய கும்பலைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என Dr Fia கருதுகிறார், காரணம், ஜூலியாவை எப்படியாவது பாதுகாப்பாக அவர் இருக்கும் இடத்திலிருந்து வெளியே கொண்டுவந்துவிட அந்தப் பெண் கடுமையாக முயற்சி செய்கிறார் என்கிறார் அவர்.
ஜூலியா சமீபத்தில், தனது இளம்பிராயத்தின் பெரும்பகுதியில் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பது தனக்கு நினைவில்லை என்றும், சிறுவயதில் தான் சுற்றுலா சென்றது தனக்கு நினைவிருப்பதாகவும், மேட்லினுடைய தாயாகிய கேட்டின் குரல் தனக்கு பரிச்சயமான குரலாகத் தெரிவதாகவும் கூறியிருந்தார்.
தற்போது, தான் மேட்லின்தானா என்பதை உறுதி செய்வதற்கான DNA பரிசோதனையின் முடிவுகளுக்காக ஜூலியா காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
© OK Magazine