மர்மமான முறையில் மாயமான இளைஞர்: மீனவர் ஒருவர் பிடித்த சுறா வயிற்றில் கண்ட அதிரவைத்த காட்சி...
அர்ஜெண்டினாவில், மர்மமான முறையில் மாயமான ஒருவரின் உடல் பாகங்கள், சுறா ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடற்கரைக்கு சென்ற கணவன் மாயம்
Virginia Brugger என்னும் பெண், இம்மாதம் 18ஆம் திகதி, கடற்கரைக்குச் சென்ற தன் கணவரான Diego Alejandro Barria (35)ஐக் காணாததால் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
பொலிசார் Diegoவின் நான்கு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஒன்றில் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்துள்ளனர்.
எட்டு நாட்களாகியும் கணவனைக் காணாமல் Virginia கவலையடைந்திருந்த நேரத்தில் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி கிடைத்தது.
Credit: Jam Press
மீன் வயிற்றுக்குள் கிடைத்த உடல் பாகங்கள்
அதாவது மீனவர்கள் தாங்கள் பிடித்த சுறா ஒன்றை சுத்தம் செய்யும்போது, அதன் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, அவர்களுடன் வந்த Virginia, அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்த கையில் குத்தப்பட்டிருந்த வித்தியாசமான டாட்டூவை வைத்து, அது தன் கணவருடைய உடல்தான் என்பதை உறுதி செய்தார்.
Credit: Jam Press
காணாமல் போன கணவனை மீனின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் Virginia. இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
Credit: Jam Press
Credit: Jam Press