வேகமாக பரவும் ஆபத்தான வைரஸ் Disease X ஆக இருக்கலாம்... அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டை மொத்தமாக உலுக்கிவரும் அடையாளம் காணப்படாத மர்ம நோயானது அடுத்த பெருந்தொற்றாக உருமாறலாம் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.
இதுவரை 400 பேர்கள்
அக்டோபர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 400 பேர்கள் அந்த மர்ம நோய் பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களையே தொடர்புடைய மர்ம நோய் பாதித்துள்ளது.
சாதரணமான காய்ச்சல், இருமல், சளி, தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இதனிடையே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை அந்த மர்ம நோய்க்கு 71 பேர்கள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, நோய் பாதிப்பு அதிகமாக காணப்படும் பகுதிகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும் இந்த நெருக்கடியை மோசமாக்கி வருகிறது. இந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பது தொடர்பில் ஆய்வாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மட்டுமின்றி, மலேரியா மற்றும் நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 மற்றும் தட்டம்மை போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் போன்றவையின் இன்னொரு வகையா என்பது தொடர்பிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பேரழிவின் தொடக்கமாக
மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால், அது பல நோய்களின் விளைவாக இருக்கலாம் என்பது தொடர்பிலும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மர்ம நோய் Disease X ஆக இருக்கலாம் என்றும் பொது சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கிய கோவிட் போன்ற இன்னொரு பேரழிவின் தொடக்கமாக இது இருக்கலாம் என்பதாலும் நிபுணர்கள் தங்கள் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடும் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, போதுமான சாலை வசதி இல்லை, மழை உள்ளிட்ட காரணங்களால் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |