லொட்டரியில் 100 மில்லியன் டொலர் வென்றவர்... ஓராண்டுக்குப் பிறகும் உரிமை கோரவில்லை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த 100 மில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் பரிசை வென்ற மர்ம நபர், இன்னும் முன்வந்து தனது பரிசைப் பெறவில்லை.
மூன்றாவது மிகப்பெரிய
பதிவு செய்யப்படாத அந்த லொட்டரி சீட்டு, சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பாண்டி ஜங்ஷன் நியூஸ் ஏஜென்சி மற்றும் இன்டர்நெட் கஃபேவில் வாங்கப்பட்டது.

2025 ஜூன் மாதம் நடந்த 1517-வது குலுக்கலில் வெற்றி இலக்கங்கள் 28, 10, 3, 16, 31, 14 மற்றும் 21 ஆகும், பவர்பால் இலக்கம் 6 ஆகும்.
தற்போது இந்த மர்ம வெற்றியாளர் உரிமைக் கோர முன்வருவார் என்றால், அவர் உத்தியோகப்பூர்வமாக நாட்டின் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய லொட்டரி வெற்றியாளர்களாக அறியப்படுவார்.
கடந்த காலங்களில் லொட்டரிச்சீட்டுகள் உரிமை கோரப்படாமல் போயிருந்தாலும், இந்த நிலைமை முன்னெப்போதும் இல்லாத ஒன்று என கூறுகின்றனர்.
மட்டுமின்றி, இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு நீண்ட காலத்திற்கு உரிமை கோரப்படாமல் இருந்ததில்லை என்றும் லொட்டரி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறு ஆண்டுகள் அவகாசம்
மேலும், டிக்கெட்டுகள் அடிக்கடி தவறவிடப்படுவதாகவும், முந்தைய வெற்றியாளர்கள் பலர் தங்களுடைய டிக்கெட்டுகளை அலமாரிகளிலோ, குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது பணப்பைகளிலோ மறந்து கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, வெற்றி தொடர்பான கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன, ஆனால் உரிமை கோருபவர் நேரில் ஆஜரான பின்னரே அவரை உறுதிப்படுத்த சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளவர்கள் தங்கள் வெற்றித் தொகையைப் பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகும் வெற்றித் தொகையைப் பெற்றவர் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பணம் பரிசுத் தொகுப்புகளுக்கும் சமூகத் திட்டங்களுக்கும் மறுபகிர்வு செய்யப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |