தென் கொரியாவை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வடகொரியா: அமெரிக்கா, ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தகவல்
வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏவுகணைகளை ஏவிய வடகொரியா
வியாழக்கிழமை தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருப்பதாக தென் கொரியாவின் கூட்டு படைத் தளபதிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
வடகொரியாவின் வோன்சான் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த ஏவுகணையானது ஏவப்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தென் கொரியா ராணுவம் ஏவுகணை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் இதனை பகிர்ந்து, தென் கொரியா தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.
ஜப்பானின் எச்சரிக்கை
இந்த ஏவுகணை ஏவுதலுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் இந்த ஏவுகணைகள் தங்களது பயணத்தை முடித்து கொண்டதாகவும், இதனால் ஜப்பானுக்கோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |