அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி: பதிலடியாக விண்ணில் பாய்ந்த வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணை
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக, மீண்டும் வட கொரியா தனது ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது.
வட கொரியா ஏவுகணை சோதனை
ஒருபுறம் வட கொரியாவின் அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் அணுசக்தி பரிசோதனைகள், மறுபுறம் அமெரிக்கா- தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள் என கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதற்கிடையில் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
KCNA / KNS / VIA AFP-JIJI
இந்நிலையில் தென் கொரியாவும் அமெரிக்காவும் முக்கிய கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வியாழக்கிழமையான நேற்று வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவியுள்ளது.
இது தொடர்பாக பியோங்யாங்கின் KCNA செய்தி நிறுவனம் சில மணி நேரங்களுக்கு பிறகு வெளியிட்ட செய்தியில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் “ உண்மையான போருக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கும்" பீரங்கிப் பிரிவின் "சக்தி வாய்ந்த ஏவுகணையை பார்வையிட்டார் என தெரிவித்துள்ளது.
KCNA / KNS / VIA AFP-JIJI
கிம் சகோதரி எச்சரிக்கை
சமீபத்தில் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ள கருத்தில், கைப்பாவை தென் கொரிய ராணுவம் மற்றும் அமெரிக்க படைகள் கொரிய பிராந்தியத்தில் அமைதியற்ற நகர்வுகளை செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக எந்த நேரத்திலும் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை வட கொரியா எடுக்க தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
KCNA / KNS / VIA AFP-JIJI