மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை.., அமைச்சர் PTR வீட்டருகே பயங்கரம்
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் நிர்வாகி படுகொலை
தமிழக மாவட்டமான மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அவரை 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது, அந்த கும்பல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி சாலையிலேயே படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தல்லாகுளம் பொலிஸார், கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |