மது போதையில் தகராறு செய்த கணவன்.., தோசை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி
மது போதையில் தகராறு செய்த கணவரை தோசை கல் மற்றும் சப்பாத்தி கட்டையால் மனைவி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை கொன்ற மனைவி
தமிழக மாவட்டமான மதுரை, மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திக் (36) மற்றும் கனிமொழி (30). இவர்களுக்கு, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் கணவர் கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், மது போதையில் கார்த்திக் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததாகவும், குழந்தைகளை சித்ரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல நேற்றும் கார்த்திக் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து குழந்தைகளையும் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கனிமொழி, சப்பாத்திக்கட்டை மற்றும் தோசைக்கல்லால் கார்த்திக்கை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, தகவலிருந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து கனிமொழியிடம் பொலிஸார் விசாரித்தபோது, குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |