நாம் தமிழர் கட்சியின் முக்கிய தூண் சரிந்தது! உயிரிழந்த பிரபலம்.... பெரும் சோகத்தில் தம்பிகள்
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கடல்தீபன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அக்கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கடல் தீபன், இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அக்கட்சியில் தொடக்கத்திலிருந்தே சீமானுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த இவர், அக்கட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார்.
கடல் தீபன் கடலூர் செல்லகுப்பத்தை சேர்ந்தவர் ஆவர். பொறியாளரான இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதேபோல அவர் நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டங்களால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனவர் ஆவர்.
கடந்த சில தினங்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே மேடையில் பேசி, ஒன்றாக உணவருந்தி, சிரித்துப்பேசி கழித்த நாட்களெல்லாம் திரும்ப வருமா அண்ணே?
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) August 8, 2021
சிறைக்குச் செல்லும்போதும் சிரித்த முகத்தோடு சென்றீர்களே, அந்த முகத்தினை எப்போது காண்போம்?
கடலூர் வெள்ளத்தில் ஓடோடி மக்களைக் காத்தீர்களே உங்களை இனியெப்படி காண்போம்? pic.twitter.com/znurSuxymb
இந்நிலையில் இந்த துயரச் செய்தி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இடும்பாவனம் கார்த்திக், ஒரே மேடையில் பேசி, ஒன்றாக உணவருந்தி, சிரித்துப் பேசி பழகிய நாட்கள் எல்லாம் திரும்ப வருமா அண்ணே.. சிறைக்கு செல்லும் போதும் சிரித்த முகத்தோடு சென்றீர்களே, இனி அந்த முகத்தை எப்போது காண்போம்.
கடலூர் வெள்ளத்தில் ஓடி ஓடி மக்களை காத்தீர்களே. உங்களை இனி எப்படி காண்போம் என தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மறைந்த கடல் தீபனின் இறுதிச்சடங்கு கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ளது.
'மீளாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு சென்றாயே அண்ணே!'
— NTK-Manachanallur (@NTK_Manachanall) August 9, 2021
நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல்தீபன் உடல் நலக்குறைவால் நேற்றிரவு மறைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தகவல் தொழில்நுட்பப்பாசறை,
நாம்தமிழர் கட்சி@NaamTamilarOrg pic.twitter.com/rDMDSAfB7i