ஸ்டாலின் கொடுத்த 100 நாட்கள் டைம்... 50 நாள் முடிந்துவிட்டது! அதிரடியாக கேள்வி எழுப்பும் சீமான்
திமுக ஆட்சி அமைத்த 100 நாட்களில் தமிழகத்தின் பிரச்சனை தீர்க்கப்படும் என்று பெறப்பட்ட கடிதங்களின் பெட்டிகல் தொலைந்துவிட்டதாக என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற, நிகழ்ச்சியை நடத்தி, ஒவ்வொரு தொகுதி மக்களிடமும் மனுக்கள் பெற்றார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த மனுக்கள், 100 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், பொது மக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற துறையை உருவாக்கினார்.
அதன் சிறப்பு அலுவலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து, தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம்.
பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்னைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.