8 தொகுதிகளில் 3 -ம் இடத்தை பிடித்த நாம் தமிழர்! பாஜகவை பின்னுக்கு தள்ளிய சீமான்
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3 -வது இடத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி
இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
இதில், பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் யாரும் முன்னிலை வகிக்கவில்லை.
இதனிடையே, காலை 11.30 மணியளவில் தமிழகத்தில் உள்ள 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3 -வது இடத்தில் உள்ளனர்.
அதாவது, புதுச்சேரி, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, நாகை, சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3 -வது இடத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜகவை முந்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |