நாம் தமிழர் கட்சி பொதுக்குழு: மனைவியை அழைத்து அருகில் அமர வைத்த சீமான்
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம்
இந்திய நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியில் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தென் சென்னை தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் தமிழகத்தில் மீதமுள்ள 39 தொகுதிகளுக்குமான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் பேச்சு
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட நிர்வாகிகள் தேர்வை சிலர் புரிந்து கொள்ளவில்லை, முதல்கட்ட தலைவர்களே இல்லாத போது, இரண்டாம் கட்ட தலைவர் என்பதா? என கூறினார்.
அத்துடன் கட்சி தொடங்குவது எளிது, அதை தொடர்வது என்பது கடினமானது என்றும் சீமான் தொண்டர்களிடம் பேசினார்.
இதற்கிடையில் பொதுக்குழு கூட்டத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய மனைவி கயழ்விழியை அருகில் அழைத்து அமரச் சொன்ன வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |