சிக்ஸர் அடித்து வெற்றி! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய வீராங்கனை
மகளிர் உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
ரிச்சா கோஷ் 94 ஓட்டங்கள்
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 49.5 ஓவரில் 251 ஓட்டங்களுக்கு ஆல்வுட் ஆனது. ரிச்சா கோஷ் (Richa Ghosh) 77 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார்.
க்ளோ ட்ரையான் 3 விக்கெட்டுகளும், காப், நாடீன் டி க்ளெர்க் மற்றும் மலாபா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டஸ்மின் பிரிட்ஸ் டக்அவுட் ஆக, சுனே லூஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது.
அரைசதம் விளாசிய அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 70 (111) ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
நடீன் டி க்ளெர்க் ருத்ர தாண்டவம்
அடுத்து வந்த நடீன் டி க்ளெர்க் (Nadine de Klerk) அதிரடியில் மிரட்டினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ளோ ட்ரையான் (Chloe Tryon) நிதானமாக ஆட இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கிராந்தி கவுட்டின் 47வது ஓவரில் நடீன் டி க்ளெர்க் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். அரைசதம் அடித்த அவர் 49வது ஓவரில் சிக்ஸர் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி 252 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற நடீன் டி க்ளெர்க் 54 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அவர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |