சமந்தாவை விவாகரத்து செய்த பின் குற்றவாளியைப் போல் நடத்தப்படுகிறேன் - நடிகர் நாக சைதன்யா வேதனை
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் குற்றவாளியைப் போல் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சமந்தாவுடன் விவாகரத்து
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார்.
ஆனால் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது.
அதன் பின்னர் நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா வேதனை
சமந்தாவின் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் சோபிதா, நாக சைதன்யாவை சாடி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள நாக சைதன்யா கூறுகையில், "நான் சமந்தாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நூறும் முறை யோசித்துதான் எடுத்தேன்.
அது நடந்து தற்போது பல வருடங்கள் ஆகியும், நான் இன்னும் குற்றவாளியைப் போல் நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது. நான் மட்டுமில்லாமல் சோபிதாவும் இந்த கிண்டல்களுக்கு ஆளாகிறார்" என வேதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |