நாக சைதன்யா-சோபிதா திருமண வீடியோ: நயன்தாராவின் வீடியோவை விட அதிக விலையில் Netflix வாங்குவது ஏன்?
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண வீடியோ 50 கோடி ரூபாய்க்கு Netflix இற்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யா-சோபிதா
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் அவர்கள் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
அதையடுத்து பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.
பின் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு ஹைதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
மேலும் இருவரின் திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலாகியது. அதில் இருவரின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 4ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாக அச்சிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திருமணம் வீடியோவை Netflix நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Netflix இல் திருமண வீடியோ
விற்பனை நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு Netflix இல் வெளியானது.
அது பெருமளவில் பரபரப்பு ஏற்பட்டது. அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள், பாடல்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என நயன்தாரா புகார் கூறி இருந்தார்.
நயன்தாரா திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண வீடியோ 50 கோடி ரூபாய்க்கு Netflix இற்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நயன்தாராவின் திருமண வீடியோவை விட நாக சைதன்யாவின் திருமண வீடியோவின் விலை அதிகமாக இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிக விலையில் விற்பது ஏன்?
நாக சைதன்யாவின் திருமணம் 8 மணி நேரம் நடைபெறவுள்ளதாகவும் தெலுங்கு திருமணம் என்பதால் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் எனவும் இந்த அளவுக்கு Netflix நிறுவனம் பணம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |