4 மணி நேர பயணம்.. தமிழகம் TO இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர், வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் TO இலங்கை கப்பல் பயணம்
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது.
நாகையில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. நாகையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும்.
பின்னர், மறுமார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல் நாகைக்கு வந்தடையும்.
இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் மொத்தம் சாதாரண 133 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கு கட்டணத்துடன் துரித உணவுகளை பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்ல முடியும். 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |