வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
பிரபல ஹொட்டல் உரிமையாளரான இந்தியர் ஒருவரும் அவரது மனைவியும் இத்தாலி நாட்டில் விபத்தொன்றில் பலியானார்கள்.
பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி
இந்தியாவின் நாக்பூரில் அமைந்துள்ள Gulshan Plaza என்னும் ஹொட்டலின் உரிமையாளரான ஜாவேத் அக்தர் (57), அவரது மனைவி நாதிரா மற்றும் மூன்று பிள்ளைகள் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில், Grosseto என்னுமிடத்தில் அவர்கள் விபத்தொன்றில் சிக்கினார்கள்.
விபத்தில் ஜாவேதும் நாதிராவும் அவர்கள் பயணித்த மினி பஸ்சின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தம்பதியரின் பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தம்பதியரின் மூத்த மகளாக Arzoo (25) ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், அவரது தங்கைகளான Zezel (15) மற்றும் Shifa (21) ஆகியோர் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பழுதான வேன் ஒன்று சாலையோரமாக இழுத்துச் செல்லப்படும்போது அந்த வேன் மீது ட்ரக் ஒன்று மோத, அந்த வேன் ஜாவேத் குடும்பம் பயணித்த மினி பஸ் மீது மோத, மினி பஸ் நொறுங்கியுள்ளது.
காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Zezel, நாக்பூரிலிருக்கும் தன் உறவினர்களுக்கு தகவல் கூற, அவர்கள் உடனடியாக இத்தாலிக்கு விரைந்துள்ளார்கள்.
The Embassy conveys its heartfelt and sincere condolences for the tragic loss of two Indian nationals from Nagpur in an accident near Grosseto.
— India in Italy (@IndiainItaly) October 3, 2025
Our prayers for the speedy recovery of the injured family members who are undergoing treatment. The Embassy is in contact with the…
இந்நிலையில், இந்திய தம்பதியரின் மரணம் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இத்தாலியிலுள்ள இந்திய தூதரகம், உயிரிழந்த இந்திய தம்பதியருக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அவர்களுடைய பிள்ளைகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |