தங்கம் வென்ற இலங்கை வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமல் ராஜபக்சே! வெளியான வீடியோ
இலங்கை அணியின் விளையாட்டு துறை அமைச்சரான நமல் ராஜபக்சே, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற Dinesh Priyantha-வை பாராட்டி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான எப். 46 பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் 58.23 மீற்றர் வீசி வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த இம்முறையும் பதக்கம் வெல்வார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அதே போன்று இன்று நடைபெற்ற F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்தார்.
இதன் மூலம் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாட்டி விளையாட்டு துறை அமைச்சர் நமல் ராஜபக்சே வீடியோ கால் மூலம் பேசி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.