பிஜோர்ன், மாபாகா-வின் மிரட்டலான பந்துவீச்சில் சுருண்ட நமீபியா
Namibia 156 runs all out vs south africa: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அலெக்ஸாண்டர் நிதான ஆட்டம்
நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று நமீபியா அணி முதலில் துடுப்பாடியது. அலெக்ஸாண்டர் நிதானமாக ஆட, மைக்கேல் மற்றும் ப்ரைலிங்க் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
பின்னர் ஸ்டீன்கேம்ப் 23 (36) ஓட்டங்களில் இருந்தபோது பிஜோர்ன் பந்துவீச்சில் போல்டானார். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த அலெக்ஸாண்டர் ரன்அவுட் ஆனார்.
விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஜோர்ன்
அடுத்து வந்த எராஸ்மஸ் (3), ஈட்டன் (4) ஆகியோரது விக்கெட்டுகளையும் பிஜோர்ன் போர்டுன் (Bjorn Fortuin) கைப்பற்றினார்.
மேக்ஸ் ஹெய்ங்கோ அதிரடியாக 6 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாச, சனே க்ரீன் 33 (42) ஓட்டங்கள் எடுத்த நிலையில் மாபாகா பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
36.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகளும், மாபாகா மற்றும் பீட்டர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |