அயர்லாந்தை 129 ஓட்டங்களில் சுருட்டி..ஒருநாள் தொடரை கைப்பற்றிய நமீபியா அணி
Namibia win odi series 3-2 vs ireland: அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், நமீபியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விண்ட்ஹோக்கில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், நமீபியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது.
சுருண்ட அயர்லாந்து
அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விண்ட்ஹோக்கில் நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி 33.1 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோர்டன் நெய்ல் 33 (25) ஓட்டங்கள் விளாசினார்.
ஜேஜே ஸ்மிட் 4 விக்கெட்டுகளும், ஜேக் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளும், ரூபென் ட்ரம்பெல்மன், மேக்ஸ் ஹெய்ங்கோ மற்றும் வில்லியம் மைபர்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய நமீபியா
பின்னர் ஆடிய நமீபியா அணி 21.2 ஓவர்களில் 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
லௌரென் ஸ்டீன்கேம்ப் 46 ஓட்டங்களும், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 30 (18) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜேஜே ஸ்மிட் ஆட்டநாயகன் விருதும், எராஸ்மஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
