டிம் 93, பிலிப்ஸ் 65 ஓட்டங்கள்! இந்திய அணியை நொறுக்கிய நியூசிலாந்து..அபார வெற்றி
New zealand beat india by 7 wickets: இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஹாமில்டனில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இஷான் கிஷன், ஷ்ரேயாஸ்
முதலில் ஆடிய இந்திய அணி 191 ஓட்டங்கள் குவித்தது. இஷான் கிஷன் (Ishan Kishan) 32 பந்துகளில் 61 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ஓட்டங்களும் விளாசினர்.
ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளும், நேதன் ஸ்மித் மற்றும் பிளைர் திக்னர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டிம் செய்பெர்ட் (Tim Seifert) 50 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் விளாசினார்.
க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 65 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினார்.
