சுவிட்சர்லாந்தில் பேர்ண் மேற்கு நகரசபை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத் தொடர்: முக்கிய முடிவுகள் கலந்தாய்வு
சுவிட்சர்லாந்தில் இன்று பேர்ண் மேற்கு நகரசபை நிர்வாகிகளுடன் சுவிட்சர்லாந்து கட்சிகள், பேர்ண் நகரசபையின் முதன்மையான நிர்வாகிகள், அதிகாரிகள் , சுவிட்சர்லாந்தின் மிக முதன்மையான ஊடகங்கள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பில், இப்பகுதி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுப்பது பற்றியும், உடனடியாக நிறைவேற்ற வேண்டியது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பேர்ண் மேற்கு பகுதிக்கு சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரையிலானவர்களுக்கான பொழுதுபோக்கு தொடர்பானவற்றை கவனத்தில் எடுத்து வரவிருக்கும் நவம்பர் 19ம் திகதி நடக்க இருக்கும் தேர்தலின் வெற்றி முடிவை கொண்டு இதை நிறைவேற்றுவதற்காக தீர்மானித்தனர்.
3.52 மில்லியன் சுவிஸ் பிறாங்குகள் மதிப்பிலான நிலம் ஒன்றையும் பேர்ண் மேற்கு பகுதி நிர்வாகம் அடையாளப்படுத்தி அதனைப்பெற்றுத் தருமாறும் கோரியிருக்கின்றது.
சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் மேற்குப்பகுதி நகரசபை பணிமனையில் இணையர் நந்தினி முருகவேள் அவர்களும், சமூகநலத்துறையில் பணியாற்றுவதனால் இச்சந்திப்பில் பங்குபற்றி பேர்ண் மேற்குப்பகுதிக்கான தேவைகளை நிறைவேற்றித்தரும்படியான கோரிக்கைக்கு உறுதுணையாக அதிகாரிகளுடன் இணைந்து தமது பங்களிப்பினைச்செய்திருந்தார்.
இது தொடர்பான செய்தி சுவிஸ் பொதுமக்களுக்கு மிகவும் அறிமுகமான புண்ட், பிலிக் ஆகிய நாளிதழ்களின் இணையச் செய்திகளில் வெளிவந்துள்ளது. மேலும் இவை நாளை நாளிதழ்களிலும், தொலைகாட்சி செய்திகளிலும் வெளிவரவுள்ளன.
இச்செய்தியினை மக்கள் பார்வையிட்டு தேர்தலில் மக்கள் வாக்களித்து என்ன முடிவைக் கொடுக்கின்றார்களோ அதற்கேற் சுவிட்சர்லாந்து அரசு முடிவை நடைமுறைப்படுத்தும்.
பேர்ண் மேற்குப்பகுதி மக்கள் மிகவும் அக்கறையோடு கோரிக்கை நிறைவேறத்தகுந்தவாறு வாக்களித்து தேவைகளை நிறைவுசெய்துகொள்வது பேர்ண் மேற்குப்பகுதி மக்களின் கைகளில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |