தவெகவில் இணைந்தது ஏன்? நாஞ்சில் சம்பத் விளக்கம்
தவெகவில் இணைந்தது ஏன் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பதிலளித்துள்ளார்.
தவெகவில் நாஞ்சில் சம்பத்
மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், திமுக, மதிமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி நாஞ்சில் சம்பத், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக மேடைகளில் பேசி வந்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது ஏன்?, விஜய் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் ரங்கசாமியை எதிர்க்காதது ஏன்?, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது ஏன்? என பல்வேறு கேள்விகளுக்கு தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பதிலளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |