ஒரு கால்பந்தாட்டம்... கலவர பூமியான மொத்த நகரம்: ரசிகர்கள் வெறியாட்டம்
இத்தாலியின் நேபிள்ஸ் நகரை Napoli மற்றும் Eintracht Frankfurt ரசிகர்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களால் கவவர பூமியாக மாறிய நகரம்
மொத்த நேபிள்ஸ் நகரமும் இந்த இரு கால்பந்து அணி ரசிகர்களால் கவவர பூமியாக மாறியுள்ளது. புதன்கிழமை இரவு இரு அணிகளும் Diego Armando Maradona மைதானத்தில் களம் கண்டுள்ளது.
@getty
ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்னரே, இரு அணி ரசிகர்களும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கணக்கான பொலிசார் நகரமெங்கும் களமிறக்கப்பட்டனர்.
மட்டுமின்றி, Frankfurt ரசிகர்கள் Atalanta அணி ரசிகர்களில் வன்முறையாளர்கள் குழு ஒன்றை களமிறக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு அணி ரசிகர்களும் நட்பு பாராட்டிவருபவர்கள் என்றே கூறப்படுகிறது.
நேபிள்ஸ் நகர நிர்வாகம் முன்வைத்த கடுமையான கட்டுப்பாடுகளே இந்த வன்முறைக்கு முதன்மை காரணம் என கூறப்படுகிறது. Frankfurt பகுதி மக்கள் தொடர்புடைய ஆட்டத்திற்கு டிக்கெட் வாங்குவதில் இருந்து தடை செய்தனர்.
@getty
வன்முறையாளர்களை களமிறக்கிய ரசிகர்கள்
ஏற்கனவே Frankfurt ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே வன்முறையாளர்களை நேபிள்ஸ் நகரில் களமிறக்கியது Frankfurt அணி ரசிகர்கள் தரப்பு.
இதனையடுத்து, நேபிள்ஸ் நகரம் சுமார் 300 வன்முறையாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனிடையே, இரவு நடந்த ஆட்டத்தில் Napoli அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.