பனிக்கட்டியில் தூங்கும் போலார் கரடி., பிரித்தானிய புகைப்படக் கலைஞருக்கு கிடைத்த விருது
Napping Polar Bear என அழைக்கப்படும் இந்தப் புகைப்படம் இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான People's Choice விருதை வென்றது.
பிரித்தானிய புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி (Nima Sarikhani) பனிக்கட்டியில் தூங்கும் பனிக்கரடியின் (Polar Bear) இந்தப் படத்தை எடுத்தார்.
இந்தப் புகைப்படத்திற்காக, நிமா சரிகானி இந்த ஆண்டு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மக்கள் தேர்வு விருதுக்கு (Wildlife Photographer of the Year People's Choice Award) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, பனிக்கட்டியின் மேல் தூக்கத்தில் இருந்த இந்தப் போலார் கரடியை சரிகானி அற்புதமாக படம் பிடித்துள்ளார்.
Photo: Nima Sarikhani
ஒரு கப்பலில் இருந்தபடி சரிகானி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம், விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கு இடையிலான சரியான உறவைக் காட்டும் படம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது என லண்டனில் உள்ள Natural History Museumத்தின் இயக்குனர் Dr Douglas Gurr கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
polar bear sleeping on an iceberg, Wildlife Photographer of the Year People's Choice Award, Nima Sarikhani Photography, Nima Sarikhani, napping Polar bear