பணி நாட்கள் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி பணி நாட்கள் குறித்து மீண்டும் பேசியது பேசுபொருளாகியுள்ளது.
நாராயண மூர்த்தி பேசியது
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது மனைவி சுதா மூர்த்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் பேசும் சில கருத்துக்களும் சர்ச்சையாக மாறியது.
முன்னதாக, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை பேசியுள்ளார். அதாவது, வேலை, வாழ்க்கை, சமநிலை என்ற விடயத்தில் (Work-life balance) துளியும் நம்பிக்கை இல்லை. கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என்று இருந்ததை 1986 -ம் ஆண்டில் 5 நாட்களாக மாற்றியது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்திய பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது நாமும் கடின உழைப்பை செலுத்தினால் தான் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இருக்கும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |