ஒரே நாளில் ரூ 6800 கோடியை இழந்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் குடும்பம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெருமளவில் சரிந்துள்ளது.
நாராயண மூர்த்தியின் குடும்பம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவால் நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பில் ரூ.6,875 கோடி மாயமாகியுள்ளது.
மார்ச் 12ம் திகதி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குவிலை சுமார் 4.31 சதவிகிதம் சரிவை எதிர்கொண்டது. அதாவது பங்கின்விலை ரூ 71.55 என குறைந்து ரூ 1509.05 என விற்பனையானது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், நாராயண மூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ.26,287.19 கோடி மதிப்புள்ள 4.02 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி வெளியான தரவுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 4.31 சதவிகித பங்குகளின் மதிப்பு என்பது ரூ 33,163 கோடி என்றே தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது ரோஹன் மூர்த்தி ரூ.2,771 கோடி இழப்பை எதிர்கொண்ட நிலையில் அக்ஷதா மூர்த்தி ரூ.1,778.79 கோடி மற்றும் சுதா என் மூர்த்தி ரூ.1,573.54 கோடி சொத்துக்களை இழந்துள்ளனர்.
நாராயண மூர்த்தி ரூ 684 கோடிகளை இழந்து, தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ 3,299.79 கோடி என்றே கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தி 0.40 சதவீத பங்குகளையும், அவரது மனைவி சுதா என் மூர்த்தி 0.92 சதவீத பங்குகளையும் வைத்திருந்தனர்.
ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது சகோதரி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் தலா 1.62 மற்றும் 1.04 சதவிகித பங்குகளை கொண்டுள்ளனர். அத்துடன் நாராயண மூர்த்தியின் பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்தியும் இன்போசிஸில் 0.04 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |