ட்ரம்பின் ஆணையை நிராகரித்துவிட்டு... சீனாவில் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான், ரஷ்யா
ஈரானின் அணுசக்தி பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் பொருட்டு ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு ஒன்று சீனத் தலைநகரில் ஒன்று கூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடைகளை நீக்குவதற்கு ஈடாக
ஈரானிய அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் ஆணைகளை ஈரான் நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
கடந்த 2015ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த அதில் ஈரான் ஒப்புக்கொண்டது.
ஆனால் 2018 ல், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு வருடம் கழித்து, ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் கடந்த வாரம், இஸ்லாமிய குடியரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைத்து ஈரானிய தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த முடியாது
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை விரைவாக நெருங்கி வருவதாக மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன ந அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அச்சுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |