தந்தையின் ரூ 777,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... தனியாக சாதித்த இளைஞர்
இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் முதன்மையான நபரான நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி தமது தந்தையின் ரூ 777,352 கோடி நிறுவனத்தில் எந்த பொறுப்பும் வேண்டாம் என வெளியேறி, தனியாக சாதித்துள்ளார்.
பொறுப்பை ஏற்காமல்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீப காலமாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருபவர் என்பதுடன், அதே அளவுக்கு அவரது கருத்துக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
இளைய சமூகம் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 70 மணி நேரம் வேலை பார்க்க தயாராக வேண்டும் என கூறியது, நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அவரது மனைவி சுதா மூர்த்தியும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருபவர் தான். இருப்பினும் நாராயண மூர்த்தியையும் அவர் உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தையும், அது உருவாக்கியுள்ள தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது.
நாராயண மூர்த்தி போன்றே அவரது மகனும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எந்த பொறுப்பையும் ஏற்காமல் தற்போது வெளியேறியுள்ளார். ரோஹன் மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது அவருக்கு 1.67 சதவீதம் பங்குகள் சொந்தமாக இருந்துள்ளது.
அந்த பங்குகளில் இருந்து ஈவுத்தொகையாக ரூ 110 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறார். 2014ல் ரோஹன் மூர்த்தியும் அவரது இரு நண்பர்களான அர்ஜுன் நாராயண் மற்றும் ஜார்ஜ் நிச்சிஸ் ஆகியோர் இணைந்து Soroco என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ரோஹன் மூர்த்தி செயல்பட்டு வருகிறார். Soroco நிறுவனம் இதுவரை தங்கள் ஆண்டு வருவாய் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும், வெளியான தரவுகளின் அடிப்படையில் 2022ல் ரூ 155 கோடிகள் வருவாய் ஈட்டியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மூத்த சகோதரி
ரோஹன் மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஈவுத்தொகையாக 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தாலும், அவரது மொத்த சொத்து மதிப்பு தொடர்பிலும் முறையான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் என்பவரின் மகள் லக்ஷ்மி வேணு என்பவரை 2011ல் திருமணம் செய்துகொண்ட ரோஹன், கருத்துவேறுபாடு காரணமாக 2015ல் இந்த தம்பதி விவாகரத்தும் பெற்றுள்ளது.
இதன் பின்னர் 2019ல் அபர்னா கிருஷ்ணன் என்பவரை ரோஹன் திருமணம் செய்துகொண்டார். ரோஹன் மூர்த்தியின் மூத்த சகோதரி அக்ஷதா மூர்த்தி முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |