மோடியின் நண்பன் நான்! எலான் மஸ்க் பேசியது என்ன? முழு விபரங்களுடன்
அரசமுறைப்பயணமாக அமெரிக்க சென்றுள்ள மோடிக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நியூயார்க் அரண்மனைக்கு சென்ற மோடி முக்கியமான நபர்களை சந்தித்து பேசி வருகிறார், இந்நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ எலான் மஸ்கை சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியை மிகவும் நேசிக்கிறேன், இது ஒரு அருமையான சந்திப்பு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் தொழிற்சாலைக்கு மோடி வந்திருந்தார், நீண்ட காலமாகவே ஒருவருக்கொருவர் தெரிந்திருந்தோம்.
Great conversation with @NarendraModi https://t.co/UYpRvNywHb
— Elon Musk (@elonmusk) June 21, 2023
உலகளவில் எந்தவொரு பெரிய நாட்டை விடவும் இந்தியா அதிக வாக்குறுதிகளை கொண்டுள்ளது, இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி நம்ப முடியாத வகையில் உற்சாக இருக்கிறேன்.
உண்மையிலேயே இந்தியா மீது மோடி அதிக அக்கறை கொண்டுள்ளார், ஏனெனில் எங்களை போன்றவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறார்.
இந்தியாவுக்கு சரியானதை செய்ய ஆசைப்படுகிறார், அதற்காக உழைக்கிறார், மோடியின் ரசிகன் நான்.
அடுத்தாண்டு இந்தியாவுக்கு வரவிருக்கிறேன், விரைவில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் இருக்கும் என உறுதிகூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டார் லிங்க் இணைய சேவையை இந்தியாவில் கொண்டு வர விரும்புவதாகவும், இதனால் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
ANI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |