அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்?
பிரித்தானிய அரசியலில் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகிறார் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டவரான அரசியல்வாதி ஒருவர்.
அவர்தான் பிரித்தானியாவை காப்பாற்றப்போகிறார் என ஒரு கூட்டம் கூறிக்கொண்டிருக்க, அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்கே சென்றுவிடுவேன் என நேரலையிலேயே கூறியுள்ளார் இந்திய வம்சாவளியினரான தொலைக்காட்சிப் பிரபலம் ஒருவர்!
யார் அந்தப் பெண்?
அவரது பெயர், நரீந்தர் கௌர். பிரபல பிரித்தானிய தொலைக்காட்சியில் பணியாற்றும் நரீந்தர், இந்திய வம்சாவளி பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்தவர் ஆவார்.
Good Morning Britain, GB News மற்றும் The Wright Stuff போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நரீந்தர், சமீபத்தில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் Reform UK கட்சித் தலைவரான Nigel Farage அடுத்து பிரதமர் ஆவார் என்றும், அவர்தான் நாட்டைக் காப்பாற்றப்போகிறார் என்றும் அவரைப் புகழ்ந்து தள்ள, அதைக் கேட்ட நரீந்தர், அப்படி Nigel Farage பிரதமர் ஆனால், நான் இந்தியாவுக்கே சென்றுவிடுவேன் என நேரலையிலேயே கூறியுள்ளார்.
"I will move to India if Nigel Farage becomes prime minister."
— Grifty (@TheGriftReport) September 29, 2025
- Narinder Kaur
Well, that's it. im 💯 voting, Reform UK, now 😂😂 pic.twitter.com/CNISfUUU6h
நான் ஏற்கனவே இந்தியாவில் வீடு வாங்கும் முயற்சியைத் துவங்கிவிட்டேன், Nigel Farage பிரதமர் ஆனால், நான் இந்தியாவுக்கு சென்றுவிடுவேன் என்றும் கூறியுள்ளார் நரீந்தர்.
இந்த வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாக, Nigel Farageஇன் ஆதரவாளர்கள், நரீந்தருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.
அதே நேரத்தில், நரீந்தருக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் கருத்துக்களை வெளியிட, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் நரீந்தர்.
100s of messages of support like this below after my appearance on @JeremyVineOn5! I feel so emotional that I am someone's voice - that they feel heard...I won't stop, even though at times it's so very hard. pic.twitter.com/1I3WhwRu2B
— Narinder Kaur (@narindertweets) September 29, 2025
புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துவரும் Nigel Farage, புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பிப்பதற்கான உரிமையை ரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், பிரித்தானிய குடிமக்கள் அல்லாத யாரும் அரசின் உதவி பெற தடை விதிக்க இருப்பதாகவும், பிரித்தானிய குடியுரிமைக்கு யாராவது விண்ணப்பித்தால், அவர்கள் தங்கள் சொந்தக் குடியுரிமையை கைவிட கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் Nigel Farage கூறியுள்ளது பிரித்தானிய அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |