Air Taxi விமான போக்குவரத்து சோதனை முயற்சியில் NASA
NASA தற்போது எதிர்கால விமான போக்குவரத்துக்கான முக்கிய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நகரங்களில் விரைவாக பயணிக்க உதவும் Air Taxi எனப்படும் மின்சார விமானங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடைபெறுகிறது.
RAVEN SWFT எனப்படும் சிறிய அளவிலான eVTOL விமானத்தைப் பயன்படுத்தி காற்றழுத்த குழாய்கள் மற்றும் நேரடி பறப்பு சோதனைகளை NASA நடத்திவருகிறது.
நாசாவின் இந்த ஆளில்லா சோதனை விமானம் 38 பவுண்டு எடையுடன்,6 அடி அகலமான சிறகுகளைக் கொண்டது. இதில் 24 தனித்தனியாக இயங்கக்கூடிய பாகங்கள் உள்ளன. அவை விமானத்தை கட்டுப்படுத்த உதவும்.
நாசாவின் Langley Research Center-ல் இந்த சோதனைகள் நடைபெற்றுவருகிறது.
பல ஏர் டாக்சி நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் செயல்பாடுகளை ரகசியமாக வைத்துருப்பாதால், NASA பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தரவுகளை வெளியிடுகிறது.
இது எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. உதாரணமாக, பயணத்தின் நடுவே மோட்டார் செயலிழந்தால் என்ன நடக்கும் என்பது போன்ற சூழல்களை நாசா ஆய்வு செய்துவருகிறது.
நாசாவின் இந்த முயற்சிகள், Air Taxi தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA Air Taxi, eVTOL Flight control, NASA Air Taxi Research, RAVEN SWFT, Autonomous Aircraft Testing, NASA Research